மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம்
பருத்தி உற்பத்தியில் நீண்டகால ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் ஆதரவை வழங்குவதற்கும் மகாராட்டிரா மாநிலத்தில் நாக்பூரிலும், அரியானா மாநிலத்தில் சிர்சாவிலும் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஐ.சி.ஆர்)(Central Institute for Cotton Research), இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தினால் 1976ல் நிறுவப்பட்ட மத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது மாநில பல்கலைக்கழகங்களின் செயலில் ஈடுபாட்டுடன் பருத்தி குறித்த பயன்பாட்டு ஆய்வுகளை நடத்துகிறது. இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி முயற்சிகள் அகில இந்திய ஒருங்கிணைந்த பருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவருகின்றன. இதன் தலைமையகம் நாக்பூரிலும், மற்ற இரண்டு பிராந்திய அலகுகள் கோயம்புத்தூர், தமிழ்நாடு மற்றும் அரியானாவின் சிர்சாவிலும் அமைந்துள்ளன.
Read article
Nearby Places

நாக்பூர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள வானூர்தி நிலையம்

நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி